விவசாயிக்கு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடு
தரம் குறைந்த விதையை விற்றதால், விவசாயிக்கு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடு வழங்க திண்டுக்கல் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம். இவருக்கு திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோட்டில் விவசாய நிலம் உள்ளது. அதில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பாகற்காய் சாகுபடி செய்ய அவர் முடிவு செய்தார். இதற்காக திண்டுக்கல்லில் உள்ள ஒரு கடையில் விதைகளை வாங்கினார். பின்னர் உழவு செய்து விதைகளை பயிரிட்டார். ஆனால் விதைகள் முளையிட்டதும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, சுருண்டது. இது தொடர்பாக விதை வாங்கிய கடையில் சென்று திருவேங்கடம் கேட்டார்.
அப்போது, பஞ்சகவ்யா மற்றும் ஒரு வகை உரத்தை இடுமாறு கடைக்காரர் கூறியிருக்கிறார். அதன்படி பஞ்சகவ்யா தெளித்து, உரமிட்டும் பயிரில் முன்னேற்றம் இல்லை. அதோடு விதைகளை உற்பத்தி செய்த நிறுவன பிரதிநிதியும் நேரில்வந்து பார்க்கவில்லை. இதனால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தை அவர் தொடர்பு கொண்டார். அப்போது பாகற்காய் விதைகள் தரம் குறைந்தவை என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் நுகர்வோர் கோர்ட்டில் திருவேங்கடம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதி பிறவிபெருமாள் தலைமையில் உறுப்பினர்கள் நாகேந்திரன், சண்முகப்பிரியா ஆகியோர் விசாரித்தனர். இதையடுத்து கடை சார்பில், திருவேங்கடத்துக்கு பாகற்காய் சாகுபடி செலவு தொகை ரூ.92 ஆயிரத்து 800 மற்றும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு என மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 800 மற்றும் வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்