அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை பழைய பஸ் நிலையத்தில் நேற்று காலை தக்கலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கனிம பொருட்களை ஏற்றி கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக பாரம் ஏற்றியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 லாரிகளுக்கும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டிய பிறகு லாரிகள் விடுவிக்கப்பட்டன.


Next Story