பல்பொருள் அங்காடி உரிமையாளரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
பல்பொருள் அங்காடி உரிமையாளரிடம் ரூ.1¼ லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருவெறும்பூர் பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் ரவீந்திரன். இங்கு மேற்பார்வையாளராக ஸ்ரீரங்கம் கல்மேட்டு தெருவை சேர்ந்த சூர்யா (வயது 24) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சூர்யா ராலி வாங்க வேண்டும் என கூறி ரவீந்திரனிடம் ரூ.1.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அங்கு பணியாற்றி வரும் பெண்களிடம் ஒரு லட்ச ரூபாய் மற்றும் 4 பவுன் தங்க நகையை வாங்கி அடகுவைத்து மோசடி செய்தாராம். இது குறித்து ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story