1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன


1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன
x

சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 1 முதல் 15-ந்தேதி வரை 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 15-ந்தேதி வரை மொத்தம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் நடப்படுவதின் முக்கிய நோக்கம் மாவட்டத்தில் பசுமை புரட்சியை உருவாக்குவதாகும். பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாப்பதற்காக மாநில பசுமைக்குழு மற்றும் மாவட்ட பசுமைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் -அமைச்சரின் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை மாவட்டமாக உருவாக்குவதற்காக சாலைகளின் இருபுறங்களிலும், பொது இடங்களிலும், ஆறுகள் மற்றும் குளங்களின் கரைகளிலும், பள்ளி வளாகங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story