உலக சாதனைக்காக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா


உலக சாதனைக்காக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா
x

காட்டுப்புத்தூர், தெள்ளூரில் 1 மணி நேரத்தில் உலக சாதனைக்காக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேலூர்

மரக்கன்றுகள்

வேலூர் மாவட்டத்தில் உலக சாதனைக்காக 1 மணி நேரத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டது.

அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், காட்டுபுத்தூர் ஊராட்சியில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகோபி தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்னாத்தூர் தி.மு.க. பேரூர் செயலாளர் அருள்நாதன் வரவேற்றார்.

தொடங்கி வைத்தனர்

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.

இதேபோல் ஊசூர் அடுத்த தெள்ளூர் ஊராட்சியில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் தலைமை தாங்கினார்.

வேலூர் ஒன்றியக்குழு தலைவர் அமுதாஞானசேகரன், துணைத்தலைவர் மகேஸ்வரிகாசி, மாவட்ட கவுன்சிலர் பாபு, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முகிலன் வரவேற்றார்.

இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Next Story