என்ஜினீயர் வீட்டில் ரூ.1¼ லட்சம்-நகை ெகாள்ளை
குளச்சல் அருேக சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் ரூ.1¼ லட்சம் ரொக்கம் மற்றும் 2¾ பவுன் நகை கொள்ளை தொடர்பாக உறவுப்பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருேக சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் ரூ.1¼ லட்சம் ரொக்கம் மற்றும் 2¾ பவுன் நகை கொள்ளை தொடர்பாக உறவுப்பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர் வீட்டில் கொள்ளை
குளச்சல் அருகே சேவிளை கல்லுவிளையை சேர்ந்தவர் ஹென்றி பெஞ்சமின் (வயது 57). இவர் சவூதி அரேபியாவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா (40). இவர் ஒரு வாரமாக வீட்ைட சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்ேபாது புனிதா தனது கைப்பையை வீட்டின் வெளியே வைத்து விட்டு சீரமைப்பு பணியை மேற்பார்வையிட்டார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அந்த கைப்பை காணாததை கண்டு புனிதா திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதில் ரொக்கம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் 2¾ பவுன் தங்க நகை மற்றும் வீட்டு அசல் சொத்து பத்திரம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றையும் வைத்திருந்தார்.
வழக்குப்பதிவு
இது குறித்து புனிதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் ேபரில் போலீசார் விசாரணை நடத்தி அவருடைய உறவுப்பெண் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.