சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் 1½ பவுன் நகை பறிப்பு


சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் 1½ பவுன் நகை பறிப்பு
x

தேங்காப்பட்டணம் அருகே சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் 1½ பவுன் நகையை பறித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

புதுக்கடை:

தேங்காப்பட்டணம் அருகே சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் 1½ பவுன் நகையை பறித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சாலையில் விளையாடிய சிறுமி

தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம்புத்தன்துறையை சேர்ந்தவர் கிளைசன் (வயது39), ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இளைய மகள் ஹர்பின் (10) வீட்டின் அருகில் உள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி யூஜின் (39) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென சிறுமியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். அப்போது சிறுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுமி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். உடனே, யூஜின் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றார்.

தொழிலாளி கைது

இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூஜினை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டின் அருகே சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story