காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நித்திரவிளையில் காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நித்திரவிளையில் காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு நித்திரவிளை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்த போது அதில் சிறு, சிறு மூடைகளில் 1,130 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காருடன் ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story