ரெயிலில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ரெயிலில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

ரெயிலில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் வின்சன்ட், அன்பு செழியன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ரெயில் நிலையத்திலும், அரக்கோணம் வழியாக செல்லும் ரெயில்களிலும் சோதனை செய்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்த போது ரெயில் பெட்டிகளில் ஏறி போலீசார் சோதனை செய்தனர். அப்போது சுமார் 1½ டன் ரேஷன் அரிசி மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். இதனை பறிமுதல் செய்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.


Next Story