1¼ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பழனியில் 1¼ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
பழனி நகர் மற்றும் அடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் கமலா உத்தரவின்பேரில் நகராட்சி பணியாளர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாசுக்கட்டுப்பாடு வாரிய திண்டுக்கல் உதவி பொறியாளர் அனிதா, பழனி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையிலான பணியாளர்கள் நேற்று பழனி அடிவாரம், நகர் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் 1¼ டன் அளவுக்கு பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story