டெம்போவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


டெம்போவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

களியக்காவிளை அருகே டெம்போவில் நூதன முறையில் கடத்தி வந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை,


களியக்காவிளை அருகே டெம்போவில் நூதன முறையில் கடத்தி வந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

b

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைசாவடியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையிலான போலீசார் காலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரளாவை நோக்கி ஒரு டெம்போ வேகமாக வந்தது. இதைகண்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, டெம்போவின் பின் பகுதியில் தேங்காய்கள் நிரப்பப்பட்ட நிலையில் இருந்தது. அதனை அகற்றி பார்த்த போது அடிப்பகுதியில் சிறு சிறு மூடைகள் இருப்பதை போலீசார் கண்டனர். அந்த மூடைகளில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசியை நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து டெம்போவுடன் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

இதுதொடர்பாக டெம்போ டிரைவரான பேச்சிப்பாறை காந்திநகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்பிக்காடு குடோனிலும், டெம்போவை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.


Next Story