சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

ரேஷன் அரிசி கடத்தல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, அந்த வாகனத்தில் 1,225 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளாக கட்டி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து அந்த சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கண்ணன் என்ற கோவிந்தராஜ் (வயது 29), கும்பகோணத்தை சேர்ந்த திவாகர் (27), சேலம் சக்திவேல் (26) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story