தம்பதி உள்பட 3 பேரை தாக்கிய தொழிலாளிக்கு 1 ஆண்டு சிறை


தம்பதி உள்பட 3 பேரை தாக்கிய தொழிலாளிக்கு 1 ஆண்டு சிறை
x

தம்பதி உள்பட 3 பேரை தாக்கிய தொழிலாளிக்கு 1 ஆண்டு சிறை

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கோவிலில் திருவிழா நடந்தது. விழாவில் சாமி ஊர்வலத்தின் போது சிலர் மேள தாளத்திற்கு ஏற்ப ஆட்டம் போட்டனர். இதில் பத்மநாபபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது41) என்பருக்கும், வேறு சிலருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் மறுநாள் இரவு ராஜேந்திர பிரசாத் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சரவணன் (38) உள்பட 5 பேர் சென்று அவரை வெளியே அழைத்தனர். வெளியே வந்த ராஜேந்திர பிரசாத்தை சரவணன் கம்பால் தாக்கினார். இதை தடுத்த ராஜேந்திர பிரசாத்தின் தந்தை கோலப்பன், மனைவி சுஜாதா ஆகியோரையும் தாக்கினார். அவருடன் வந்த கூட்டாளிகள் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய 5 பேர் மீதும் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது சம்மந்தமான வழக்கு பத்மநாபபுரம் குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பிரவின் ஜீவா, குற்றம் நிரூபிக்கப்பட்ட சரவணனுக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 அபராதமும் விதித்து தீர்பளித்தார். தாக்குதலின் போது உடன் சென்ற மற்ற 4 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார்.


Next Story