1 வயது ஆண் குழந்தை தண்டவாளங்களுக்கு இடையே வீசப்பட்ட கொடூரம்


1 வயது ஆண் குழந்தை தண்டவாளங்களுக்கு இடையே வீசப்பட்ட கொடூரம்
x

ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் தண்டவாளங்களுக்கு இடையே ஒரு வயது குழந்தையை யாரோ வீசிச்சென்ற கொடூரம் நடந்துள்ளது. அந்த குழந்தை கொன்று வீசப்பட்டதா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் தண்டவாளங்களுக்கு இடையே ஒரு வயது குழந்தையை யாரோ வீசிச்சென்ற கொடூரம் நடந்துள்ளது. அந்த குழந்தை கொன்று வீசப்பட்டதா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை வீசப்பட்ட கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்ேபாது இரண்டாவது பிளாட்பாரத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பீகார் மாநிலம் பரவுனி வரை செல்லும் பரவுனி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8 மணியளவில் வந்து நின்று ஓரிரு நிமிடங்களில் புறப்பட்டு சென்றது.

அதன் பிறகு அந்த வழித்தடத்தில் இரவு 10 மணி வரை எந்த ரெயிலும் செல்லவில்லை.

இந்நிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் 2-வது பிளாட்பாரம் முடியும் இடத்தில் தண்டவாளங்களுக்கு இடையில் சுமார் ஒரு வயது உடைய அழகான ஆண் குழந்தை வீசிச் செல்லப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ரெயிலிலிருந்து வீசினரா?

உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அங்கு சென்றபோது குழந்தை இறந்த நிலையில் கிடந்தது.

இதனையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயிலில் வந்தவர்கள் குழந்தையை கொன்று வீசினரா? அல்லது வளர்க்க முடியாமல் இறந்து விட்டதால் அதனை பெற்றவர்கள் வீசினரா? என்பது தெரியவில்லை,

அது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்த போன ஆண் குழந்தை மாநிறத்துடன் காணப்பட்டது. கிளி பச்சை நிறத்திலான பேண்ட், வெள்ளை நிறத்தில் ஊதா நிற குறுக்கு கோடு போட்ட டி சர்ட் அணிந்திருந்தது.

சிறிய கம்பளி பெட்ஷீட்டால் சுற்றி வைத்து குழந்தையை அலங்காரம் செய்து பெற்றோர் வீசி சென்று உள்ளனர்.

இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன குழந்தை யாருடையது? பெற்றோர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக குழந்தையை தண்டவாளங்களுக்கு இடையே வீசி சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியயும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story