10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலி


10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலி
x

10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியானான்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

மல்லூர் அருகே உள்ள பி.மேட்டூர் கிராமம் மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகிரி. இவருடைய மகன் ரகுபதி (வயது 15). மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 10 நாட்களாக ரகுபதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் ரகுபதி தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மல்லூரில் உள்ள கடைக்கு செல்வதற்காக வந்துள்ளான்.

அப்போது மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது எதிரே வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக ரகுபதியின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரகுபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். இதையடுத்து போலீசார் ரகுபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story