10 செல்போன்கள், பணம் திருட்டு
10 செல்போன்கள், பணம் திருட்டு
தஞ்சை மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவர் விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். ஆலைக்கு எதிரே உள்ள வளாகத்தில் இவரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வட மாநிலத்தவரும் தங்கி உள்ளனர். வேலையை முடித்துவிட்டு தங்கும் இடத்திற்கு சென்ற போது அங்கு இருந்தவர்களின் 9 செல்போன்கள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். இதுபற்றி சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோன்று சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(32). லாரி டிரைவரான இவர் கங்கைகொண்டானிலிருந்து பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு சென்னை செல்லும் வழியில் விருதுநகர்-சாத்தூர் இடையே எட்டூர் வட்டம் சுங்கச்சாவடியில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி விட்டார். அதிகாலையில் எழுந்து பார்க்கும்போது லாரியில் இருந்த செல்போன் மற்றும் ரூ.4800 திருடு போயிருந்தது. இது பற்றி தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்