ரூ.10½ கோடியில் அறிவுசார் மைய கட்டிட பணி


ரூ.10½ கோடியில் அறிவுசார் மைய கட்டிட பணி
x
தினத்தந்தி 25 Aug 2023 1:00 AM IST (Updated: 25 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10½கோடியில் கட்டப்படும் அறிவுசார் மைய கட்டிட பணியை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காலாஞ்சிப்பட்டி ஊராட்சியில் ரூ.10½ கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் பூங்கொடி, வேலுச்சாமி எம்.பி., காலாஞ்சிப்பட்டி ஊராட்சி தலைவர் அமுதா செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். ஆய்வின் முடிவில், அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகையில், படித்த மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக போட்டித் தேர்வுக்கான அறிவு சார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, மத்திய மற்றும் மாநில அரசு உள்பட பல்வேறு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் போட்டி தேர்வு பயிற்சிக்காக இனி வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயிற்சி மைய கட்டிட பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாணவ, மாணவிகள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குறிக்கோளுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவ, மாணவிகள் செல்போன்களை படிப்பிற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்களை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்தி, உயர்நிலையை அடைந்து சமுதாயத்திற்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும் என்றார்.


Next Story