வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி


வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 18 April 2023 2:29 AM IST (Updated: 18 April 2023 2:59 PM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலியானது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சேலம்

தலைவாசல்:

10 ஆடுகள் சாவு

தலைவாசல் வீரவனூர் சொக்கனூர் பகுதியில் செந்தில் என்பவர் தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து 20 ஆடுகள், கோழிகள் வளர்த்து வந்தார்.

ஆடுகளுக்கு தீவனம் வைக்க சென்ற போது 10 ஆடுகள் வயிறு, தலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் ஆடுகள் இறந்து கிடந்தன.

விசாரணை

தகவல் அறிந்தவுடன் கால்நடைத்துறை அதிகாரிகளும், பேரூராட்சி அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தது தெரிய வந்தது.

இதேபகுதியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான ஆடுகளையும் வெறிநாய்கள் கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வெறிநாய்களை பிடிக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story