ஆட்டோ மீது லாரி மோதி 10 பேர் காயம்


ஆட்டோ மீது லாரி மோதி 10 பேர் காயம்
x

பெண் தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது லாரி மோதி 10 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள வெங்கிலி தனியார் ஷூ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆட்டோவிலும், தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ்சிலும் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தொழிற்சாலையில் வேலை முடிந்த பிறகு பள்ளிகொண்டா, ஒதியத்தூர், கொல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வேலைக்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஒரு ஆட்டோவில் வீ்ட்டுக்கு சென்று கொண்டிருந்ததனர்.

அகரம்சேரியை அடுத்த கொல்லமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பெண் தொழிலாளர் ஒருவர் ஆட்டோவில் இருந்து இறங்கினார். அப்போது திடீரென ஆட்டோ நின்றதால் பின்னால் வந்த லாரி ஆட்டோ மீது மோதி ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில் காயம் அடைந்தவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆட்டோ மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story