10 கிலோ ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை


10 கிலோ ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை
x

10 கிலோ ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை

திருப்பூர்

குன்னத்தூர்

குன்னத்தூர் சந்தையானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தை ஆகும். இங்கு விளை பொருட்களைத் தவிர அதிக அளவு ஆடு மாடுகள் விற்பனைக்கு வருகிறது. காடுகள் அதிகம் இருப்பதால் விவசாயிகளும், பொது மக்களும் அதிக அளவில் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்கள். அதேபோல் பிற மாவட்டங்களில் இருந்து செம்மறி மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வருவார்கள். நேற்று நடைபெற்ற குன்னத்தூர் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவு வருகை தந்து செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வாங்கி சென்றனர்.. கடந்த வாரங்களில் 10 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது ஆனால் நேற்று நடைபெற்ற சந்தையில் 10 கிேலா எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை ஆனது.


Next Story