ரூ.10 லட்சத்தில் பெத்தான் குளம் தூர்வாரும் பணி
தொக்காலிகாடு ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் பெத்தான் குளம் தூர்வாரும் பணி நடந்தது.
தஞ்சாவூர்
கரம்பயம்:
பட்டுக்கோட்டை அருகே தொக்காலி காடு ஊராட்சியில் பெத்தான் குளம் தூர்வாரப்படாமல் தூர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் தூர்வார ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குளத்தின் நான்கு புறங்களும் கரைகளை உயர்த்தி. இரண்டு புறங்கள் மண் சரியாமல் கற்கள் பதித்து ஒரு பக்கம் படித்துறை கட்டி குளம் நிரம்பிய பிறகு தண்ணீர் வெளியேறும் வகையில் கட்டும பணி நடைபெற்று வருகிறது.பெத்தான் குளம் சீரமைத்து தண்ணீர் நிரம்பிய பிறகு மாரியம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மிகவும் வசதியாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story