ஈரோட்டில் ரூ.10 லட்சம் செலவில் 2 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குஎம்.பி., மேயர் தொடங்கி வைத்தனா்


ஈரோட்டில் ரூ.10 லட்சம் செலவில் 2 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குஎம்.பி., மேயர் தொடங்கி வைத்தனா்
x

ஈரோட்டில் ரூ.10 லட்சம் செலவில் 2 இடங்களில் உயர் கோபுர மின் விளக்கை எம்.பி., மேயர் தொடங்கி வைத்தனா்

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலம் 45-வது வார்டுக்குட்பட்ட சிதம்பரம் காலனி மற்றும் 46-வது வார்டுக்குட்பட்ட கருப்பண்ணசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில், ஈரோடு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் செலவில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு, உயர் கோபுர மின் விளக்கினை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதில் துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மண்டல தலைவர் சசிகுமார், கவுன்சிலர்கள் பிரவீனா சந்திரசேகர், மோகனா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story