ஆருத்ரா போன்ற மோசடி நிதி நிறுவன வழக்குகளில் கவுன்சிலர் உள்பட மேலும் 10 பேர் கைது


ஆருத்ரா போன்ற மோசடி நிதி நிறுவன வழக்குகளில் கவுன்சிலர் உள்பட மேலும் 10 பேர் கைது
x

ஆருத்ரா போன்ற மோசடி நிதி நிறுவன வழக்குகளில் கவுன்சிலர் உள்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ், எல்பின் போன்ற நிதி நிறுவனங்கள் மீதான மோசடி வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த வழக்குகள் தொடர்பாக மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆருத்ரா நிறுவனம் தொடர்பான வழக்கில், திருவள்ளூர் சசிகுமார், ராணிப்பேட்டை உதயகுமார், சதீஷ், அசோக்குமார், முனுசாமி, வேலூர் காட்பாடி நவீன், சென்னை ஆண்டர்சன்பேட்டை மாலதி, காட்டாங்கொளத்தூர் செல்வராஜ் ஆகிய 8 பேர் கைதாகி இருக்கிறார்கள். எல்பின் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் (திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்) பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எப்.எஸ்.வழக்கில் முக்கிய குற்றவாளி ஜானகிராமன் கைதானார். மொத்தம் இந்த மோசடி வழக்குகளில் இதுவரை 90 பேர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். மேற்கண்ட கைது நடவடிக்கை பழைய வழக்குகள் சம்பந்தப்பட்டவை. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 19 வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டு, 49 குற்றவாளிகள் கைதாகி உள்ளனர். கைதான குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை

ஹிஜாவு, ஐ.எப்.எஸ். மோசடி நிதி நிறுவனங்கள் மீது முதல் கட்ட குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆருத்ரா நிறுவனம் மீது, அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த மோசடி வழக்குகளில் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ராஜசேகர், உஷா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியுடன் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story