அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் டிஸ்சார்ஜ்


அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷச்சாராயம் குடித்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி விஷச்சாராயம் குடித்து மயங்கிய 61 பேர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 14 பேர் இறந்தனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் வரை 31 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மரக்காணம் மற்றும் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 73), ஜெயராமன் (60), மனோகரன் (55), ஊத்துக்காட்டான் (47), வீரானந்தம் (41), பொன்னப்பன் (42), சண்முகம் (77), கல்வி (62), கீர்த்திவாசன் (56), நவநீதம் (42) ஆகிய 10 பேர் பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் நேற்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் வேன் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், இளைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், உதவி நிலையமருத்துவ அலுவலர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் குழுவினர் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர். தற்போது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 4 பேர் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story