சிறுவர்கள் ஓட்டி வந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


சிறுவர்கள் ஓட்டி வந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சிறுவர்கள் ஓட்டி வந்த விலை உயர்ந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சிறுவர்கள் ஓட்டி வந்த விலை உயர்ந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் மற்றும் சாலை விதிகளை பின்பற்றாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரிலும் போக்குவரத்து ஒழுங்குபிாிவு போலீசார் அவ்வப்போது வாகன சோதனை நடத்தி சாலை விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து வருகிறார் கள். மேலும் கலெக்டர் அலுவலகத்துக்குள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து ஒழுங்கு பிாிவு போலீசார் நாகா்கோவில் மாநகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

10 மோட்டார் சைக்கிள்கள்

அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டி வந்த விலை உயர்ந்த 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலென்சர் பொறுத்தப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சிறுவர்கள் ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கோட்டாரில் உள்ள போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அபராதம்

இந்த மோட்டார் சைக்கிள்களின் ஆவணங்களை காண்பித்து அபராதம் செலுத்திய பிறகு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் போலீசார் கூறினர்.


Next Story