காய்ச்சலால் 10 பேர் பாதிப்பு
குன்னத்தூரில் காய்ச்சலால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததி குடியிருப்பு பகுதியில் 4 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் 6 பெரியவர்கள், 4 சிறுவர்கள் என மொத்தம் 10 பேர் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் மற்றும் மருத்துவ குழுவினர் சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார். குடிநீர், ரத்தம் மாதிரிகள் எடுத்துக்கொண்டனர். பனிக்காலம் என்பதால் அனைவரும் தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், லேசான காய்ச்சல் ஏற்படும் போதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
Related Tags :
Next Story