பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதல்;அய்யப்ப பக்தர் உள்பட 10 பேர் காயம்


பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதல்;அய்யப்ப பக்தர் உள்பட 10 பேர் காயம்
x

நெல்லை அருகே, பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் அய்யப்ப பக்தர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே, பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் அய்யப்ப பக்தர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

அய்யப்ப பக்தர்

ஆந்திர மாநிலம் கக்கல்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 37). இவர் தனது குடும்பத்துடன் காரில் சபரிமலைக்கு வந்துவிட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.

காரில் சீனிவாசலுவின் உறவினர் பத்மாவதி (43), துளசி (31), சுப்புராயலு (41), தீப்தி (3), சித்தேந்தர் (9), புவனா (11) உள்ளிட்ட 10 பேர் இருந்தனர். காரை சீனிவாசலு ஓட்டி சென்றார்.

தடுப்பு சுவரில் மோதியது

கார் நேற்று மதியம் கன்னியாகுமரி- மதுரை நான்குவழி சாலையில் நெல்லை டி.வி.எஸ். நகர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகைதீன் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story