தெரு நாய் கடித்து 10 பேர் காயம்
திருப்பத்தூரில்தெரு நாய் கடித்து 10 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை, தெரு, ஜின்னா சாலை-3, ஏரிக்கரை, கச்சேரி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் சண்டையிடும்போது அந்த வழியாக வரும் பொதுமக்களை கடித்து குதறுகிறது. நேற்று திருப்பத்தூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முன்னா என்பவரின் மகள் முஸ்ரத் (வயது 12) தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நாய் கடித்துக் குதறியது. இதில் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதே போல கோட்டை பெருமாள் கோவில் தெரு முஹம்மது ஆரிப் (வயது 52) உள்பட பத்துக்கும் மேற்பட்டோரை நாய்கள் துரத்திச் சென்று கடித்துக் குதறியது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.