விபத்தில் 10 பேர் படுகாயம்


விபத்தில் 10 பேர் படுகாயம்
x

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மோதியது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி மோளையானூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது43). வேன் டிரைவரான இவர் அதே ஊரை சேர்ந்த வினோத்குமார், அவரது மனைவி நிவேதா மற்றும் அவரது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வேனில் சென்றார்.

கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை புறவழிச்சாலை கட்டங்குடி விலக்கு அருகே வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென பின்னால் வந்த லாரி, வேன் மீது மோதியது.

10 பேர் படுகாயம்

இந்த விபத்தில் வேனை ஓட்டிச்சென்ற வெங்கடேசன் உள்பட வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் பசுபதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story