10 பவுன் நகை மாயம்
ராமநாதபுரம் அருகே பெண்ணின் 10 பவுன் நகை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில் மாரியப்பன். இவருடைய மனைவி திவ்யா (வயது27). இவரது கணவர் சென்னையில் வேலைபார்த்து வருவதால் அங்கு சென்றுவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மேதலோடையில் சாமி கும்பிட சென்ற திவ்யா தனது சித்தப்பா வீட்டில் தங்கியிருந்து கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் 10 பவுன் நகைகளை எடுத்து போட்டுக்கொண்டு சென்றுவிட்டு திரும்பி வந்து நகைகளை டப்பாவில் வைத்தாராம். பின்னர் தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த நகைப்பெட்டியை காணவில்லையாம். இதுகுறித்து திவ்யா திருப்புல்லாணி போலீசில் தனது சித்தப்பா குடும்பத்தினர் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story