தர்மபுரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற 10 கடைக்காரர்களுக்கு அபராதம்


தர்மபுரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற 10 கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 7:01 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைக்கு வைத்திருந்த 10 கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.

தர்மபுரி

பறிமுதல்

தர்மபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத போகி பண்டிகை மற்றும் பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், கந்தசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரி பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது 10 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் 10 கிலோ சிக்கியது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அபராதம்

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், பாலித்தீன் பைகளை பொருட்கள் வழங்க பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விதிமுறையை மீறி அதிக முறை பயன்படுத்தப்பட்ட 2 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது சில கடைகளில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.


Next Story