இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர் தேவகுமாரன். இவர் ஒரு தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்து இருந்தார். அதன் பின்னர் தனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தரமறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்த தேவகுமாரன் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

இதனால் தேவகுமாரன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட தேவகுமாரன் ஏற்கனவே சிகிச்சைக்காக செலவு செய்த ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 727-யும், அவருக்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.2,500-யும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story