ஊட்டியில் 10 டன் குப்பைகள் சேகரிப்பு


ஊட்டியில் 10 டன் குப்பைகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகையில்லா போகியை வலியுறுத்தி ஊட்டியில் 10 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பழைய பொருட்களை எரிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று புகையில்லா போகியை வலியுறுத்தி ஊட்டி நகராட்சியில் 7 வாகனங்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி நடந்தது. நேற்று ஒரே நாளில் 10 டன் குப்பைகள் எரிக்கப்படாமல் சேகரிக்கப்பட்டது. இந்த குப்பைகள் காந்தல் முக்கோணம், ஸ்டோன் ஹவுஸ், புதுமந்து நுண்ணுயிர் உரமாக்கல் மையம் மற்றும் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள குப்பைகள் சேகரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு போகி பண்டிகையின் போது 6 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 4 டன் சேகரிக்கப்பட்டு உள்ளது.


Next Story