என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் தொல்லை
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 25). என்ஜினீயர். இவர் 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி கடந்த 14.7.2018-ந் தேதியன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
10 ஆண்டு சிறை
வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், என்ஜினீயர் ராஜேஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார் .