கணவருக்கு 10 ஆண்டு சிறை
பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசி பூலாவூரணி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது35). இவரது மனைவி காளீஸ்வரி (30). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, அவரது மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த காளீஸ்வரி திருத்தங்கல் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து மனைவியை வெட்டிய முத்துபாண்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.