வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
4 பேர் தற்கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 27). இவரது மனைவி புஷ்பவல்லி. கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் புஷ்பவல்லி தனது தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் கடந்த 26.2.2011 அன்று புஷ்பவல்லியை ஜெயபாண்டியுடன் வாழ்வதற்கு சமரசம் செய்தனர். அதற்கு புஷ்பவல்லி இவருடன் வாழ்வதற்கு பதிலாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புஷ்பவல்லி, அவரது தந்தை முத்துகிருஷ்ணன், அவரது அம்மா பஞ்சவர்ணம், சகோதரி மகேஸ்வரி 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக விருதுநகர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த ஜெயபாண்டியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த ஜெயபாண்டிக்கு 10 ஆண்டு் சிறை தண்டனையும், ரூ.9,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.