தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருச்சுழி அருகே உள்ள கட்டனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (வயது 38). கூலி தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பஞ்சவர்ணம் (38) என்ற பெண் தகராறை விலக்கி விட்டு தங்கத்திடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கம், பஞ்சவர்ணத்தை அரிவாளால் வெட்டினார். இதில் பஞ்சவர்ணம் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக பஞ்சவர்ணத்தின் கணவர் நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து தங்கத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.