சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் 10 ஆண்டு சிறை: நீதிபதி தீர்ப்பளித்ததும் ஓட்டம் பிடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர் - மதுரை கோர்ட்டில் பரபரப்பு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் 10 ஆண்டு சிறை: நீதிபதி தீர்ப்பளித்ததும் ஓட்டம் பிடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர் - மதுரை கோர்ட்டில் பரபரப்பு
x

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதை கேட்டதும் கோர்ட்டில் இருந்து அந்த வாலிபர் ஓட்டம்பிடித்து, மோட்டார் சைக்கிளில் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

10 ஆண்டு சிறை

மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 28), கூலித்தொழிலாளி.

கடந்த 2017-ம் ஆண்டில் இவர் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே சிறையில் இருந்த சுரேஷ், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

இதற்கிைடயே அவர் மீதான போக்சோ வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தனது ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து, கோர்ட்டில் சுரேஷ் நேற்று ஆஜரானார்.

தீர்ப்பை கேட்டதும் ஓட்டம்

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை கேட்டதும், சுரேஷ் நைசாக கோர்ட்டில் இருந்து வெளியே வந்து ஓட்டம் பிடித்தார். அவரை சிறையில் அடைக்க தீர்ப்பளிக்கப்பட்டு இருந்ததால், அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை பிடிக்க பின்தொடர்ந்து ஓடினர். கோர்ட்டு ஊழியர்களும் விரட்டிச் சென்றனர். ஆனால் கோர்ட்டு வளாகத்தில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சுரேஷ் தப்பிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story