மனைவியை அரிவாளால் வெட்டியவருக்கு 10 ஆண்டு சிறை
மனைவியை அரிவாளால் வெட்டியவருக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் அருகே உள்ள காரியாபட்டி போலீஸ் சரகம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50). இவரது மனைவி சந்திரா (47). வேல்முருகன் தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுக்கவே கடந்த 2016-ம் ஆண்டு அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சந்திரா, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், மனைவியை அரிவாளால் வெட்டிய வேல்முருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story