மாதகடப்பா மலை பகுதி காட்டில் பயங்கர தீ 100 ஏக்கரில் மரங்கள், செடி, கொடிகள் எரிந்தன


மாதகடப்பா மலை பகுதி காட்டில் பயங்கர தீ 100 ஏக்கரில் மரங்கள், செடி, கொடிகள் எரிந்தன
x

மாதகடப்பா மலை பகுதி காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 ஏக்கரில் மரங்கள், செடி, கொடிகள் எரிந்தன

திருப்பத்தூர்

வாணியம்பாடி

மாதகடப்பா மலை பகுதி காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 ஏக்கரில் மரங்கள், செடி, கொடிகள் எரிந்தன

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாத கடப்பா மலைப்பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் மரங்கள், செடி,கொடிகள் பற்றி எரிந்தன. இதனை பார்த்த வாணியம்பாடி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடர்ந்து தீ வேகமாக பரவி வருகிறது. இதில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் வளர்ந்திருந்த மரங்கள், செடி, கொடிகள் எரிந்தன. அந்த பகுதியில் இருந்த வனவிலங்குகள் என்ன ஆனது என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து வாணியம்பாடி வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ஆந்திரப் பகுதியில் இருந்து காட்டு நேற்று முன்தினம் மாலை முதல் தீ பரவியது. அங்கிருந்து, அந்த தீ வேகமாக பரவி ஜவ்வாது ராமசமுத்திரம், நாராயணபுரம், அலசந்தபுரம் காட்டு வழியாக தமிழக பகுதிக்கு பரவியது. இதனை தடுக்க வனத்துறையினர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறினார்.

கோடை காலம் வரவிருக்கும் சூழலில் ஆரம்ப கட்டத்திலேயே இது போல் தீ விபத்து ஏற்படுவதால் இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் செய்ய முன்வர வேண்டும் என மலை கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.


Next Story