நூறாண்டு பழமையான மரம்


நூறாண்டு பழமையான மரம்
x

நூறாண்டு பழமையான மரம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் கிராமத்தில் வேலாயுதகவுண்டன் புதூர் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முன்பு வேம்பு மற்றும் குன்னி எனப்படும் மரம் இரண்டும் ஒன்றாய் இணைந்து பின்னி வளர்ந்துள்ளது இந்த மரம் நூறு ஆண்டுகளுக்கு மேலான மரம் என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர் இந்த மரத்தின் அடியில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஊரில் உள்ள பெரியோர்கள் இந்த வழியாக செல்வோர் வெயில் நேரங்களில் அமர்ந்து நிழலை அனுபவித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த மரத்தில் வேர்கள் தரைக்கு மேல் காணப்படுகிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது மரம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மரத்ைத சுற்றி, வேர்கள் தெரியாதவாறு மண் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story