ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் தயார்


ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் தயார்
x

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் தயார் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 74 சதவீதம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவையான ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story