வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் நூறுசதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடிஅலுவலருக்குபாராட்டுசான்று
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் நூறுசதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடிஅலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டுசான்று வழங்கினார்.
தூத்துக்குடியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணிைய நூறு சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கோரிக்கை மனுக்கள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கல்விஉதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நலஉதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைஉதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 310 பேர் மனு கொடுத்து உள்ளனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
வாக்குச்சாவடி அலுவலருக்கு பாராட்டு
மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கண்தானம் குறித்த குறும்படத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், கண்தானம் செய்ய பதிவு செய்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.