100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் தர்ணா
மதனாஞ்சேரி ஊராட்சியில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் தர்ணா
திருப்பத்தூர்
வாணியம்பாடி
ஆலங்காயம் ஒன்றியம் மதனாஞ்சேரி ஊராட்சியில் பணிதள பொறுப்பாளராக இருப்பவர் சத்யா.
இவர் 100 நாள் வேலை செய்யும் சிலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், பணி அட்டை வழங்காம வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மதனாஞ்சேரி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் மதனாஞ்சேரி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த 100 நாள் வேலை பணியாளர்களிடம் விசாரித்தார்.
அப்போது அவரிடம் தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர்.
அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தெரிவித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story