100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
நாகப்பட்டினம்
தலைஞாயிறு பகுதி பொதுமக்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த திட்டம் கிராம பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைஞாயிறு பேரூராட்சியில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி தலைஞாயிறு பேரூராட்சிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story