100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு


100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
x

கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சின்னமோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பொன்னேரி ஊராட்சியில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரிலும், துணை சுகாதார இயக்குனர் செந்தில் ஆலோசனையின் படியும், சின்ன மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் புகழேந்தி தலைமையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, கோடை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும், உணவில் மோர் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்களை சாப்பிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், துணைத் தலைவர் அரவிந்தன், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கே.கோபி, குமரேசன், சந்தோஷ், ஊராட்சி செயலாளர் சின்னதம்பி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story