100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்
x

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே பாவாலி கிராம பஞ்சாயத்தில் உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் நேற்று காலையில் வேலைக்கு வந்த போது பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வேலை செய்ய விடாமல் திருப்பிச் செல்லுமாறு கூறப்பட்ட நிலையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அவர்களை வேலை செய்ய அனுமதித்ததால் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இப் போராட்டத்தில் 70 பெண்கள் உள்பட 90 பேர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story