100 எண் போன்று அணிவகுத்து நின்ற ஊழியர்கள்
சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 எண் போன்று ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர்.
பரமக்குடி,
சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பரமக்குடி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட ஊழியர்களால் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நூற்றாண்டு சின்னம் அமைத்து உலக சாதனை நிகழ்வு நடந்தது. இதில் ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் பங்கேற்று 15 நிமிடத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார்கள். அந்த நூற்றாண்டு சின்னமானது 80 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இந்த சாதனையை ட்ரம்ப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் முதன்மை அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையிலான அணியினர் ஏற்றுக்கொண்டனர்.
இதில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட சுகாதார பணிகள் துறை இயக்குனர் டாக்டர் அஜித் பிரபுகுமார், குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் சிவானந்தவல்லி, தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கீதா, உணவு பாதுகாப்பு துறை டாக்டர் விஜயகுமார், முதன்மை அலுவலர் பாலமுத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.