திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 100 சாராய வியாபாரிகள் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 100 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
விழுப்புரம் மாவட்ட மரக்காணம் அருகே சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு சாராயம் விற்பனை செய்யப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story