திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் மருத்துவ முகாம்


திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் மருத்துவ முகாம்
x

திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் மருத்துவ முகாம்

திருவாரூர்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் மருத்துவ முகாம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ முகாம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்தபரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவைசிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ பிரிவிலிருந்து சிறப்பு டாக்டர்களால் ஆலோசனை வழங்கப்படும்.

24-ந்தேதி

பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மன்னார்குடி வட்டாரம் ஆலங்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் வட்டாரம் காட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. எனவே இந்த இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story